மசூதி, தேவாலயத்தில் ஜெ.,வுக்காக சிறப்பு பிரார்த்தனை
செங்கல்பட்டு : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விரைவில் விடுதலை பெற வேண்டி, செங்கல்பட்டில், மசூதி மற்றும் தேவாலயத்தில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நேற்று நடந்தது.சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 27ம் தேதி, 100 கோடி ரூபாய் அபராதமும், 4 ஆண்டு கள் சிறை தண்டனையும் விதித்தது. அவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க., மற்றும் நகர, சிறுபான்மை அமைப்புகள் சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள, மசூதியில் நேற்று காலை 11:00 மணிக்கு, ஜெயலலிதா விடுதலை பெற, சிறப்பு தொழுகை நடந்தது.அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள, கிறிஸ்தவ தேவாலயத்தில், பகல் 12:00 மணிக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், மாவட்ட செயலர் குமாரசாமி, சட்டமன்ற உறுப்பினர் கள் மனோகரன், ராஜி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.