விளக்கேற்றும் நேரத்தில் பெண்கள் செய்ய வேண்டாதவை என்னென்ன?
ADDED :4119 days ago
மாலையில் வீட்டைச் சுத்தப்படுத்தி, உடல், உள்ளத் துõய்மையுடன் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மற்றபடி, கண்டதைப் பேசுவதோ, பொழுதுபோக்குவதோ, துõங்குவதோ, கண்ட தொடர்களை பார்ப்பதோ கூடாது. குறிப்பாக, மாலை 6.30 மணிக்கு தொடர்களில் அழுகை காட்சிகள், திட்டித் தீர்த்தல், வன்முறை காட்சிகள் வருகின்றன. இவற்றைப் பார்ப்பது குடும்பத்திற்கு மிக மிகக் கேடு. பெண்கள் தயவுசெய்து இந்தப் பழக்கத்தைக் கைவிடுங்கள். இதற்கு பதிலாக விநாயகர் அகவல், கந்தசஷ்டி கவசம், சிவபுராணம், அபிராமி அந்தாதி, திவ்ய பிரபந்தம் போன்றவற்றை நீங்களாகவே பாடவோ, படிக்கவோ செய்யலாம்.