புரட்டாசி திருவிழா: கல்கி அவதாரத்தில் இராமர் உலா!
ADDED :4119 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி இராமர் கோயிலில் புரட்டாசி திருவிழா சிறப்பாக நடந்தது. மூன்று நாள் விழாவில் முதல் நாள் நாள் உற்சவர் மின் அலங்காரத்தில் சப்பரத்தில் பவனி வருதல், இரண்டாம் நாள் சிம்ம வாகனத்தில் உலா வருதல், மூன்றாம் நாள் கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் நகரை சுற்றி வருதல் ஆகியன நடந்தது. சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழா நிறைவை அடுத்து மஞ்சள் நீராட்டு நடந்தது. முன்னதாக அன்னதானம்ச நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.