https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_36086_104132847.jpgகுற்றாலநாதர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_36086_104144842.jpgகுற்றாலநாதர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!திருநெல்வேலி: குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் நேற்று ஐப்பசி தேரோட்டம் விமரிசையாக நடந்தது. குற்றாலம் மெயின்அருவிக்கு அருகில் கோயில் கொண்டுள்ள குழல்வாய்மொழி அம்மன் சமேத குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 9ம் தேதி காலை 5 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது.முன்னதாக திருவிழாவிற்காக இலஞ்சியிலிருந்து திருவிலஞ்சிகுமாரரை அழைத்து வரும் வைபவம் நடந்தது. விழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன. தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. விழாவில் கடந்த ஞாயிறு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், நேற்று திங்கள் காலையில் தேரோட்டமும் நடந்தது. விநாயகர், சுப்பிரமணியர், குழல்வாய்மொழிஅம்மன், குற்றாலநாதர் ஆகிய நான்கு தேர்களையும் பக்தர்கள் வடம்பிடித்துஇழுத்தனர். முன்னதாக சிவனடியார்கள் பஞ்சவாத்தியம் முழங்கிச்சென்றனர். வரும் 15ம் தேதி காலை 9.30 மணிக்கும் மாலை 7 மணிக்கும் நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனை, 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 18ம் தேதி காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி மற்றும் திருவிலஞ்சிக்குமாரர் பிரியாவிடை கொடுக்கும் வைபவம் நடக்கிறது.