உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் புரட்டாசி 4ம் வார விழா!

பெருமாள் கோவிலில் புரட்டாசி 4ம் வார விழா!

படப்பை : சிறுமாத்துார் சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி நான்காம் வார விழா நடந்தது. படப்பையை அடுத்த சிறுமாத்துார் கிராமத்தில், 64 ஆண்டுகள் பழமைவாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், புரட்டாசி மாதம் நான்காம் வாரம், வெகு சிறப்பாக கொண்டாடப்படும். பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவர்.இந்த வருட நான்காம் வார விழாவை முன்னிட்டு, 11ம் தேதி காலை திருமஞ்சனம், மதியம் பிரசாத வினியோகம், இரவு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியின் அருளை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !