உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிபுரசுந்தரி கோவிலில் லட்சுமி யாகம்!

திரிபுரசுந்தரி கோவிலில் லட்சுமி யாகம்!

நகரி: உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நகரி, திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், லட்சுமி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்துார் மாவட்டம், நகரி டவுன் அடுத்த, கீளப்பட்டு அருகே செல்லும் கொற்றலை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில். இக்கோவிலில், நேற்று காலை, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நகர மற்றும் பகுதிவாசிகள் நலமுடன் வாழ வேண்டி, லட்சுமி யாகம் நடந்தது.இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 1,008 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.மாலையில், உற்சவர் சந்திரமவுலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், 11 குருக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !