உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளி பண்டிகையையொட்டிநோன்பு சட்டிகள் செய்யும் பணி தீவிரம்!

தீபாவளி பண்டிகையையொட்டிநோன்பு சட்டிகள் செய்யும் பணி தீவிரம்!

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பகுதியில் தீபாவளி நோன்பு பண்டிகையை முன்னிட்டு மண் சட்டிப் பானைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. தீபாவளி பண்டிகையின் மறுநாள் பெரும்பாலான பெண்கள் விரதம் இருந்து மண் சட்டியில் நோன்பு எடுத்து படைப்பது வழக்கம். தீபாவளி  பண்டிகை நெருங்கி வருவதால் ஆலப்பாக்கம், கீழ்பூவாணிக்குப்பம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், தீர்த்தனகிரி, கோபாலபுரம் உட்பட 10க்கும் ÷ மற்பட்ட கிராமங்களில் உள்ள குயவர்கள் மண் பானை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, உள்ளூரில் களிமண்  கிடைக்காததால் பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் இருந்து களி மண் கொண்டு வந்து சட்டி செய்யப்படுகிறது. இங்கு செய்யப்படும் மண்  சட்டிகள் கடலூர், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட இடங்களுக்கு எடுத்துச் சென்று மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக தொழிலாளர்கள்  தெரிவித்தனர். உள்ளூரில் சட்டிப்பானை 25 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையும், ஒரு பானை  50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையும் விற்பனை செய் யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !