உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்டோவில் கடத்திய மகாவிஷ்ணு சிலை மீட்பு!

ஆட்டோவில் கடத்திய மகாவிஷ்ணு சிலை மீட்பு!

சென்னை : திருடிய மகா விஷ்ணு சிலையை, ஆட்டோவில் கடத்திய, ஓட்டல் அதிபர் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பெரியமேடு, ராஜா முத்தையா சாலையில், நேற்று மாலை, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, முருகன் என்பவர் ஓட்டி வந்த, ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஓட்டல் நடத்தி வரும், குருநாம் சிங், 50 மற்றும், ரியல் எஸ்டேட் அதிபர் இஸ்மாயில், 48, ஆகியோர், ஒன்றரை அடி உயரம் கொண்ட, மகா விஷ்ணு சிலையை, துணியில் மறைத்து வைத்து இருந்தனர். விசாரணையில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மகாவிஷ்ணு சிலை, புரதான கோவிலில் திருடப்பட்டது என்றும், குருநாம் சிங் உள்ளிட்ட மூன்று பேரும், சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என, தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து, சிலையை மீட்டு, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !