உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை திருநாளை அலங்கரிக்க மானாமதுரையில் விளக்குகள் தயார்!

கார்த்திகை திருநாளை அலங்கரிக்க மானாமதுரையில் விளக்குகள் தயார்!

மானாமதுரை: கார்த்திகை சீசனுக்காக, மானாமதுரையில் கார்த்திகை தீபம், அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில், 200 குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இங்கு, இயற்கையாகவே மண்பாண்ட பொருட்கள் தயாரிக்க ஏதுவாக சவடு மண், வண்டல் மண், மணல் கிடைக்கின்றன. அதன்மூலம் கார்த்திகை சீசனுக்காக, சாதாரண கிளியான் சட்டி, அகல்விளக்கு, சரவிளக்கு, தேங்காய் விளக்கு, மாடவிளக்கு, குத்துவிளக்கு போன்று அதிகளவிலான ரக விளக்குகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வ ருகின்றனர்.50 பைசா முதல் ரூ.ஆயிரம்: இங்கு, தயாராகும் கிளியான் சட்டிகள் ஒன்று 50 காசு முதல், பெரிய அளவிலான விளக்குகள் 300 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. கார்த்திகை திருநாளில் தீபங்களால் வீடுகளை அலங்கரிக்க, விளக்குகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இது குறித்து விளக்கு தயாரிப்பில் ஈடுபடும் துரைராஜ் கூறுகையில்,” கடந்த ஆண்டு ஒரு வண்டி மணல் ரூ.300க்கு கிடைத்தது. தற்போது மணல் விலை ரூ.500 ஆக உயர்ந்து விட்டது. இருப்பினும், மானாமதுரை மண்ணில் செய்த விளக்குகளுக்கு வரவேற்பு அதிகம் என்பதால், தொடர்ந்து தயாரித்து மலிவான விலைக்கு தான் விற்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !