மேலும் செய்திகள்
குண்ணவாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்
3981 days ago
குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீட கும்பாபிேஷகம்
3981 days ago
கொடைக்கானல்: அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் எதிரில் துணைச்சாலை அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பக்தர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொடைக்கானல் ஆனந்தகிரி ஒன்றாவது தெருவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கோயிலின் முன்பகுதியில் ÷ பாதுமான இடம் இல்லாததால் தெருவோடு சேர்த்து மண்டபம் கட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் பிரச்னை ஏற்பட்டது. மண்டபத்திற்கான வழியையே அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் ÷ காயிலின் புனிதம் கெடுவதாக பக்தர்கள் வேதனையடைந்தனர். இதனால், கோயிலின் அருகில் 100 மீட்டர் தொலைவுவரை துணைச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நகராட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் துவங்கி பலமாதங்கள் கடந்த பின்பும் இதுவரை பக்கவாட்டிற்கான தாங்கு சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரோடு அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. தற்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாக அந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனந்தகிரி 2 வது தெருவில் இருந்த கோயிலின் பிரதான படிக்கட்டுகளும் இடிக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “இடைத்தேர்தல் காரணமாக ரோடு அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் துவங்கப்படும்,”என்றார்.
3981 days ago
3981 days ago