அமாவாசைக்கு முதல் நாள் தீபாவளி.. அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி!
ADDED :3981 days ago
செஞ்சி: அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வருவது, அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகையில் புத்தாடை, பட்டாசு மட்டுமின்றி அசைவ உணவும் முக்கிய இடம் பிடிக்கும். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளியும், அமாவாசையும் இணைந்தே வரும். பல வீடுகளில் தீபாவளிக்கு அடுத்து வரும் அமாவாசையன்று நோன்பு எடுப்பது வழக்கம். அத்துடன் அமாவாசையின் போது அசைவம் சமைப்பதில்லை. இதனால் அமாவாசையில் தீபாவளி வரும் நாட்களில் அசைவம் சமைப்பவர்கள் முதல் நாளே அசைவம் சமைத்து தீபாவளியை கொண்டாடி விடுவார்கள். இந்த முறை அமாவாசைக்கு முதல் நாள் தீபாவளி வருவதால் வீடுகளில் அசைவம் சமைப்பதில் சிக்கல் இல்லை. எனவே அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.