உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி பிடாரி அம்மன் கொடிமரத்தில் வெள்ளி கவசம்!

சிங்கம்புணரி பிடாரி அம்மன் கொடிமரத்தில் வெள்ளி கவசம்!

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பிடாரி அம்மன்கோயில் கொடிமரத்திற்கு ரூ. 20 லட்சத்தில் வெள்ளி கவசம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேவுகப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் கோயில் முன் 30 அடி உயர கொடிமரம் உள்ளது. பீடம் தவிர்த்து 27 அடி உயர கொடி மரத்திற்கு, வெள்ளி கவசம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ.,அருணகிரி கூறும்போது, பக்தர்கள் நன்கொடையாக 35 கிலோ வெள்ளி வழங்கினர். ரூ. 20 லட்சத்தில் காரைக்குடி ஸ்தபதி தியாகராஜன் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !