சிலை எடுப்பு திருவிழா!
ADDED :4066 days ago
திருமங்கலம் : திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் அய்யனார் கருப்பசாமி கோயிலில், சிலை எடுக்கும் திருவிழா நடந்தது. இதில் 500 சிலைகளை மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.புரட்டாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இவ்விழா நடந்தது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவில் கடைசி நாளான நேற்று, ராணுவ வீரர், பஸ், போலீஸ், சுவாமி சிலை என பல்வேறு சிலைகளை மக்கள் நேர்த்திகடனாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.