உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோவிலில் ரூ 21லட்சம் உண்டியல் வசூல்!

மேல்மலையனூர் கோவிலில் ரூ 21லட்சம் உண்டியல் வசூல்!

செஞ்சி : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், வேதா முன்னிலையில் நடந்தது. 21 லட்சத்து 45 ஆயிரத்து 874 ரூபாய் ரொக்கம், 94 கிராம் தங்க நகை, 260 கிராம் வெள்ளி நகையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.அறங்காவலர் தலைவர் சரவணன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !