கோவில் உண்டியல்களில் திருக்கல்யாண விக்ரகம்!
ADDED :4012 days ago
கோவில் உண்டியல்களில் தற்போது தெய்வங்களின் சிறிய அளவிலான பித்தளை, வெள்ளி விக்ரகங்கள் அதிக அளவில் கிடைக்கிறது. வீடுகளில் பெற்றோர், மூதாதையர் வழிப்பட்ட சிறிய அளவிலான கிருஷ்ணன், ராமர், சீதை, யசோதா, ராமாயண, மகாபாரத இதிகாச கதாபாத்திரர்களின் சிறிய அளவிலான விக்ரகங்கள் அதிக அளவில் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக கிடைக்கிறது.அந்த வகையில், நேற்று ராமர், லட்சுமணன், சீதை, அனுமன், அன்னபூரணி விக்ரகங்கள் திருக்கல்யாண கோலத்திலான பித்தளை விக்ரகம் கிடைத்தது. இதனை போல், ஒவ்வொரு முறை உண்டியல் எண்ணும் போதும் விக்ரகங்கள் கிடைப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். சமீபகாலமாக கோவில் உண்டியல்களில் சிறிய அளவிலான விக்ரகங்கள் அதிக அளவில் குவிவதற்கு, இளம் தலைமுறையினர் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றமே காரணம் என ஆன்மிக வாதிகள் தெரிவித்தனர்.