எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் 51 நாள் கோமாதா பூஜை நிறைவு!
பெரம்பலூர் :பெரம்பலூர் அருகே, எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையடிவாரத்தில், அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக, 51 நடந்த கோமாதா பூஜை நிறைவடைந்தது.மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காக, 51 கோமாதா பூஜை நடைபெறும். இந்தாண்டுக்கான கோமாதா பூஜை கடந்த ஆகஸ்ட், 25ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் மகா சித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் கோமாதா பூஜை மற்றும் "பதிவிரதை ஸ்ரீ மண்டோதரி பூஜை நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு கோபூஜை, 108 லட்சுமி பூஜை, அஸ்வ பூஜை, சித்தர்கள் வேள்வியும், தீபாராதனையும் அதை தொடர்ந்து அருள்மிகு நளினியாம்பிகை உடனுறை காகன்னை ஈஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சாதுக்களுக்கு வஸ்திரதானமும், சுமங்கலிகளுக்கு மாங்கல்ய தானமும், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.விழாவில் சிங்கப்பூர் நடராஜஆனந்த பாபா, சிங்கைராஜ பாபா, ரத்தினவேல், செரின் பாங், எளம்பலூர் ஊராட்சி தலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை டிரஸ்ட் இயக்குநர்கள் ரோகினி , சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் டிரஸ்ட் பொறுப்பாளர்கள் செய்தனர்.