கீழக்கரை முளைப்பாரி விழா!
ADDED :4012 days ago
கீழக்கரை: பெரியபட்டிணம் மெயின்ரோட்டில் உள்ள ஆதிமுத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவ விழா நடந்தது.காப்புகட்டிய நாள்முதல் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெண்கள் பொங்கலிட்டனர். அழகு நாயகியம்மன் கோயில் ஊரணியில் பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பெரியபட்டிணம் கிராமப்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.