சிவாலயத்தில் 1,008 பெண்கள் பால்குட ஊர்வலம்!
ADDED :4011 days ago
ஊத்துக்கோட்டை: சிவாலயத்தில் அபிஷேகத்திற்காக, 1,008 பெண்கள், பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர். வெங்கல் அடுத்த, தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ளது சர்வேஸ்வரா தியான நிலையம். இங்குள்ள லிங்கத்திற்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதன், 25ம் ஆண்டு வெள்ளி விழா, நேற்று, விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தாமரைப்பாக்கம், மாகரல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,008 பெண்கள் பால்குடம் ஏந்தி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவரவர் எடுத்து வந்த பாலை, அங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர்.