உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு!

வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு!

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியலில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் காணிக்கை கிடைத்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை  வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறந்து பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் ஆய் வாளர் சொரிமுத்து முன்னிலை வகித்தார். இதில் தொழிலதிபர் சபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீவேணுகோபால் சுவாமி சாரண சாரணியர்  குழுவினர் மார்கண்டேயன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் உண்டியலில் இருந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மூன்று  மாதங்களில் உண்டியல் வருமானம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 277 ரூபாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !