மொரட்டாண்டி கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
ADDED :4011 days ago
புதுச்சேரி: சனீஸ்வர பகவான் கோவிலில், நிறுவனர் சிதம்பர குருக்கள் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவிலில், நிறுவனர் சிதம்பர குருக்கள் 68 வது பிறந்த நாளையொட்டி, அப் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மீனவர் கூட்டமைப்பு தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில், 68 ஏழை பெண்களுக்கு புடவைகளை, சிதம்பர குருக்கள் வழங்கினார். 68 ஆண்களுக்கு வேட்டி, சட்டைகள், 68 பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் கீதா சங்கர் குருக்கள், சீதாராம் குருக்கள், ஸ்ரீவித்யா, வச்சலா, மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.