உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் 26ல் லட்சார்ச்சனை!

பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் 26ல் லட்சார்ச்சனை!

பாகசாலை : பாகசாலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும் 26ம் தேதி, கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பேரம்பாக்கம் அடுத்துள்ள, பாகசாலை கிராமம். இங்கு, பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆதிசங்கரர், அருணகிரிநாதர், ராகவேந்திரர் ஆகியோர் வருகையால் சிறப்பு பெற்றது.இந்த கோவிலில், கந்தசஷ்டி பெருவிழா, வரும் 24ம் தேதி தொடங்கி, தொடர்ந்து, ஆறு நாட்கள் நடைபெறவுள்ளது. இவ் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக லட்சார்ச்சனை வழிபாடு, 26ம் தேதி நடைபெறும். அன்று, காலை 6:00 மணி முதல், 7:00 வரை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்பின், காலை 8:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, லட்சார்ச்சனை நடைபெறும். இரவு 9:00 மணிக்கு, சுவாமி, மலர் அலங்காரத்தில் ஆலய உலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !