வயலூர் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா அக், 24ம் தேதி துவக்கம்!
ADDED :4010 days ago
திருச்சி: வயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் வரும், 24ம் தேதி கந்த சஷ்டி பெருவிழா துவங்குகிறது பிரசித்தி பெற்ற திருச்சி, வயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதங்களில் கந்த சஷ்டி பெருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு வரும், 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. வரும், 30ம் தேதி வரை நாள்தோறும் லட்சார்ச்சனை, சண்முகார்ச்சனை மற்றும் கந்த சஷ்டி பெருவிழா நடக்கிறது. இதை யொட்டி, நாள்தோறும் உற்சவர், பல்வேறு வாகனங்களில் செல்லும் திருவீதி உலா நடக்கிறது.