உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டைச் சேவல் கூவும் நேரம்!

கொண்டைச் சேவல் கூவும் நேரம்!

மாமரமாக நின்ற சூரபத்மனை முருகன் வேல் எறிந்து இருகூறாக பிளந்தார். அதில் ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொன்றை சேவலாகவும் மாற்றினார். மயிலின் மீது உட்கார்ந்து கொண்டு சேவலை தன் கொடியின் சின்னமாக்கிக் கொண்டார். சேவல் ஒளியை விரும்பும் பறவை. இருட்டி விட்டால் தன் பணியை முடித்து கூட்டுக்குள் தங்கிக் கொள்ளும். அதிகாலை வெளிச்சத்தை வரவேற்கும் உலகின் முதல் ஜீவன் இதுவே. அது கொக்கரக்கோ என கூவுவது ஓம் என்ற நாதத்திற்கு ஈடானது. ஓம் என்பது பிரணவ மந்திரம். இதன் பொருள் எல்லாம் நானே என்பதாகும். முருகனே உலகம் அனைத்திற்கும் முதல்வர் என்ற முறையில் இந்த மந்திரம் உருவாக்கப் பட்டது. இதை சிவபெருமானும் ஒப்புக் கொண்டுள்ளார்.அதனால் தான் அவர், இந்த மந்திரத்தின் பொருளை தன் மகனிடம் கேட்டு தெரிந்து கொண்டார். சுறுசுறுப்பான சேவலைப் போல, மனிதனும் அதிகாலையில் எழுந்து பணிகளை துவக்கி விட வேண்டும். அவ்வாறு செய்தால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். இதை உணர்த்தவே முருகன் சேவல்கொடியுடன் காட்சி தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !