உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்முடன் இறைவன்!

நம்முடன் இறைவன்!

நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகள் சிலவற்றை கேட்போம்.ஊ  மற்றவரை ஒருவர் நிந்திக்கும்போது அது வானத்திற்கு செல்கின்றது. அங்கே... வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின், அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள்மூடியிருக்கின்றன. பின்,அது வலப்புறம், இடப்புறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்குஇடமில்லாமல் அது - எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது.ஊ  ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழிசுமத்தினால் விளைகின்ற பாவம் யார் அந்தச் செயலை முதலாவதாக தொடங்கினாரோ, அவரையே சாரும்.ஊ  ஒரு வியாபாரத்தில்பங்குதாரர்கள் இருவர் எதுவரை ஒருவரையொருவர் மோசம் செய்யாமல் இருப்பார்களோ, அதுவரை நான் அவர்களுடனேயே இருக்கின்றேன். ஆனால்,ஒருவருக்கொருவர் மோசம் செய்வார்களேயானால், அவர்களை மட்டும் நான்நீங்கி விடுகின்றேன். அங்கே ஷைத்தான் குடியேறிவிடுகின்றான், என்று அல்லாஹ் கூறுகின்றான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !