உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு!

சின்னசேலம் கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு!

சின்னசேலம்: சின்னசேலம் பகுதி கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கங்காதீஸ்வரர் கோவில், வேதவள்ளி மாரியம்மன், விஜயபுரம் செல்வமுருகன் கோவில், செங்குந்தர் ஆக்கிய வினாயகர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வர் கோவில், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில், பஞ்சாட்சரநாதர் கோவில், உலகிய நல்லூர் அர்த்தநாரீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில்களில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !