தியாகதுருகம் கோவில்களில் சிறப்பு பூஜை!
ADDED :4009 days ago
தியாக துருகம்: தீபாவளி தினமான நேற்று கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டினர். ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர். வெளியூர் பக்தர்கள் வாகனங்களில் வந்து வழிபாடு நடத்தினர். தியாகதுருகம் முருகன், சீனுவாச பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அதிக அளவில் சென்று விளக்கேற்றி பூஜை செய்தனர்.