உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமைச்சார் அம்மனுக்கு அமாவாசை வழிபாடு!

அமைச்சார் அம்மனுக்கு அமாவாசை வழிபாடு!

விழுப்புரம்: விழுப்புரம் அமைச்சார் அம்மன் கோவிலில் அமாவாசை நோன்பு வழிபாடு நடந்தது. விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் அமைச்சார்  அம்மன் கோவில் அமைந்துள்ளது. அமாவாசை நோன்பை ஒட்டி இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு அபி÷ ஷகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நோன்பு படையலிட்டு வழிபட்டு, 21 முறை கோவிலை  சுற்றினர். இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !