திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில்ஐப்பசி திருவிழா தொடக்கம்
ADDED :4033 days ago
நாகர்கோவில்: 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவசம்போர்டு தந்திரி சங்கர நாராயணரரு கொடியேற்றினார். தொடர்ந்து விழாவில் தினமும் காலையிலும், மாலையிலும் பாராயணம் நிகழ்ச்சிகளும், சுவாமி வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 30-ம் தேதி 9-ம் நாள் விழாவில் இரவு 9 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 31-ம் தேதி இரவு எட்டு மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் சென்று ஆராட்டு முடித்து கோயிலுக்கு வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.