உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மாவாசை தீர்த்தவாரி: காவிரிநதியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்!

அம்மாவாசை தீர்த்தவாரி: காவிரிநதியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்!

மயிலாடுதுறை: கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது பாவங்களைபோக்க ஐப்பசிமாதம் மயிலாடுதுறை காவிரிநதியில் நீராடினா ல் பாவச் சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி 30 நாட்களும் புதிய நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.அதனால் கா சிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கிவருகிறது.பெருமைமிக்க துலா உற்சவம் மயிலாடு துறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது.இவ்வாண்டு கடந் த 18ம் தேதி ஐப்பசி(துலா மாதம்)மாதம் பிறப்பு தீர்த்தவாரி நடந்தது.தொடர்ந்து முக்கிய விழாவான அ மாவாசை தீர்த்தவாரி விழா நேற்று மதியம் நடந்தது. அதனை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூர நாதர் சுவாமி,ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், அறம்வளர்த்தநாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, பரிமளரங்கநாதர் சுவாமி ஆகிய 5 சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் காவிரி துலாக்கட்டத்தில் இருகரைகளிலும் எழுந்தருளினர். காவி ரிக்கரையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடு க்கும் நிகழ்ச்சி நடந்தது.  தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !