சோலைமலை முருகன் கோயில் கந்தசஷ்டி விழா துவக்கம்!
ADDED :4022 days ago
அழகர்கோவில் :அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயில் கந்தசஷ்டி விழா நேற்று துவங்கியது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பல்வேறு அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தன. பின் விக்னேஷ்வர பூஜை அனுக்ஞை, புண்யாக வாசனம், ரக் ஷாபந்தனம், யாகசாலை, லட்சார்ச்சனை நடந்தன. சுவாமிக்கு காப்பு கட்டிய பின் விரதமிருக்கும் பக்தர்கள் காப்புக் கட்டிக் கொண்டனர். அன்ன வாகனத்தில் முருகன் கோயிலை வலம் வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் அக்., 29ல் நடக்கிறது. அக்., 30ல் காலை 11.15 மணிக்கு வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.