ராமநாதபுரம் கோயில்களில் கந்தசஷ்டி விழா துவங்கியது!
ADDED :4208 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம், பெருவயல் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் நேற்று காலை துவங்கியது. இதைமுன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தன. இங்கு அக்., 29 இரவு சூரசம்ஹாரம், அக்.,30 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் நேற்று மாலை காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. இதைமுன்னிட்டு தினமும் மாலை வள்ளி, தேவசேனா சிவசுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது. அக்., 29 மாலை சூரசம்ஹாரம், அக்.,30 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. இதை போல் குண்டுக்கரை முருகன் கோயிலிலும் கந்த சஷ்டி விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.