திருநள்ளாரில் மகேஸ்வர பூஜை
ADDED :4013 days ago
காரைக்கால்: தருமபுர ஆதீனம் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகளின் முக்தி தினத்தையொட்டி, திருநள்ளார் தெற்கு வீதியில் உள்ள நினைவிடத்தில், 18 வது ஆண்டு மாகேஸ்வர பூஜை நடந்தது.கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். அபிஷேக ஆராதனை முடிந்து தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், மாகேஸ்வர பூஜை விழா மலர் வெளியிடப்பட்டது.திருநள்ளார் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், வளர்கல்வி மைய பொறுப்பாளர் முத்துவேல்பிள்ளை, நடேச வைத்தியநாதன், கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.