பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் சன்னதியில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 10 மணியளவில் திருமஞ்சன அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு உற்சவமூர்த்திக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது. பெருமாள், பத்மாஸனித்தாயார் இருவருக்கும் நட்சத்திரம் உத்திரமாக உள்ளதால் மாதத்தில் ஒருநாளன்று சிறப்பு வழிபாடுகள் நிறைவேற்றப்படும். ஸ்தலவிருட்சமாக உள்ள பழமைவாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. மேலும் புத்திர தோஷம், நாகதோஷம் உள்ளவர்கள் கோயிலில் அனுமதி பெற்று நாகபிரதிஷ்டை செய்துகொள்ளலாம். பக்தர்களுக்கு காலை 10 முதல் 12 மணிக்குள் பாயாசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அக்., 26, முதல் 28 வரை மணவாள மாமுனிவருக்கு உற்சவ விழா நடைபெற்று நிறைவு நாளன்று மங்களாசாசனம் செய்யப்படும், இதற்கான ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தானம் திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் ஆகியோர் செய்துவருகின்றனர்.