குன்றக்குடி சண்முநாத பெருமான் கோயிலில் சஷ்டி விழா!
ADDED :4013 days ago
காரைக்குடி: குன்றக்குடி சண்முநாத பெருமான் கோயில், கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. மலைக்கோயிலில் சண்முகநாத பெருமான், போற்றியை உச்சரிக்கும், லட்சார்ச்சனை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு ஏழு மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், சூரன் எதிர் வீதி உலாவும் நடந்தது. கந்த சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காப்பு கட்டி தங்கள் விரதத்தை தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. அன்று சுவாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளுகிறார். 30-ம் தேதி, திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளுகிறார். ஏற்பாடுகளை குன்றக்குடி பரம்பரை அறங்காவலர் பொன்னம்பல அடிகளார் செய்திருந்தார்.