உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் மூலநாதர் கோவிலில் மகா ருத்ராபிஷேகம்!

பாகூர் மூலநாதர் கோவிலில் மகா ருத்ராபிஷேகம்!

பாகூர்: குருஜி முரளிதர சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று மகா ருத்ராபிஷேகம் நடந்தது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், சென்னை மணிமங்கலம் படப்பை குருஜி முரளிதர சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று மாலை 6.00 மணிக்கு, மூலநாதர் சுவாமிக்கு மகா ருத்ராபிஷேகம் நடந்தது. இதில், பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 11 திரவியங்களால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11 முறை ருத்ரபாராயணமும், ருத்ரபிரசீவி செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !