உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக சதுர்த்தி: கோவில்களில் சிறப்பு வழிபாடு!

நாக சதுர்த்தி: கோவில்களில் சிறப்பு வழிபாடு!

நாக சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாகலம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி, பெண்கள் வழிபட்டனர். தீபாவளி நோன்பு முடிந்து ஐந்தாம்  நாளில், நாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒட்டி, நேற்று காலை, திருத்தணி காந்தி நகர் நல்ல தண்ணீர் குளக்கரையில் உள்ள  இரண்டு நாகலம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதையொட்டி, திரளான பெண்கள், பால், முட்டை, கம்பு, அதிரசம் மற்றும் பூஜை பொருட்களுடன் கோவில் வளாகத்திற்கு வந்தனர். பின், அங்குள்ள புற்றுக்கு பால் ஊற்றியும், மூலவர் அம்மனுக்கு படைத்தும் வழிபட்டனர். காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை தொடர்ச்சி யாக, திரளான பெண்கள் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதே போல், திருத்தணி ஒன்றியத்திலும் உள்ள நாகலம்மன் கோவில்களில் சிறப்பு பூ ஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. ஆர்.கே.பேட்டை விசாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்கோவிலில் நேற்று, திரளான பெண்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதே போல், பொதட்டூர்பேட்டை நாகாலம்மன் கோவிலிலும் நேற்று, சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !