மலைகோவிலில் கந்தசஷ்டி விழா
ADDED :4001 days ago
ஈரோடு ;ஈரோடு, காசிபாளையம் மலைகோவில் என்று அழைக்கப்படும் செல்வ விநாயகர், பாலமுருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் வரும், 30ம் தேதி நடக்கிறது. கந்த சஷ்டி விழா, 23ம் தேதி பாலமுருகனுக்கு அபிஷேகம், தீபாராதனையுடன் துவங்கியது. 29ம் தேதி பால்குடம் கிரிவலம் வந்து அபிஷேகம், தீபாராதனை மற்றும் தெய்வானையுடன் நிச்சயதார்த்த விழா நடக்கிறது.வரும், 30ம் தேதி காலை கணபதி ஹோமம், பாலமுருகனுக்கு அபிஷேகம், சுவாமிகளுக்கு அபிஷேகம், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.