உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முண்டியம்பாக்கம் கோவிலில் 30ம் தேதி கும்பாபிஷேக விழா!

முண்டியம்பாக்கம் கோவிலில் 30ம் தேதி கும்பாபிஷேக விழா!

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் நவநீத கோபாலகிருஷ்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது. விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் சென்னை மெயின் ரோடில் அமைந்துள்ள நவநீத கோபாலகிருஷ்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 5:00 மணிக்கு அங்குரார்பனம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடக்கிறது. நாளை காலை மகா சாந்தி ஹோமம், மூலவருக்கு கண் திறத்தல், விமானத்திற்கு கண் திறத்தல், மாலை மகா ஹோமம், பூர்ணாஹூதி ஆகியவை நடக்கிறது. மறுநாள் 30ம் தேதி அதிகாலை கும்ப ஆராதன ஹோமம், காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகள் ஆசியுடன், விழுப்புரம் முன்னாள் சேர்மன் ஜனகராஜ் முன்னிலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை திருவந்திபுரம் தலைமை அர்ச்சகர் நரசிம்மன் பட்டாச்சாரியார், ஸ்தபதி அய்யனார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !