வெள்ளாங்கோவிலில் கோவில் திருவிழா!
ADDED :4000 days ago
கோபி :கோபி அடுத்த வெள்ளாங்கோவிலில், பல்லி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.இன்று இரவு, 7 மணிக்கு அலங்கார பூஜையுடன், திருவீதியுலா வருதலும், நாளை மாவிளக்கு பூஜையும், பொங்கல் வைத்தலும், தண்டனிடுதல், கிடாய் வெட்டுதல் நடக்கிறது. இவ்விழாவில், சிறுவலூர், திங்களூர், குஞ்சரமடை, கொளத்துபாளையம், கோரக்காட்டூர், காவேரிபாளையம் போன்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். வரும், 30ம் தேதி மஞ்சள் வீராட்டு விழாவும், 31ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் துரைசாமி, செங்கோட்டையன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.