உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கண் திறந்ததாக செங்கல்பட்டில் பரபரப்பு!

அம்மன் கண் திறந்ததாக செங்கல்பட்டில் பரபரப்பு!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், சேப்பாட்டியம்மன் கோவிலில், அம்மன் கண் திறந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு நகரத்தில், பெரிய நத்தம் பகுதியில், சேப்பாட்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, நேற்று காலை 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அப்போது, பாலகுமாரி என்பவர், கருவறைக்குள் சென்று, அம்மனை வணங்கியபோது, அம்மன் கண் திறந்ததை பார்த்தாக, வெளியில் இருந்த பக்தைகளிடம் கூறினார். இதையடுத்து, அம்மன் கண் திறந்ததாக தகவல் பரவி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பாலகுமாரி கூறும்போது, ”கோவிலில், 27 பெண்களுடன், நெய் தீபத்தில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினோம். நான் கோவிலுக்குள் சென்றபோது, அம்மன் கண் திறந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்து கீழே விழுந்தேன். இதை கண்ட பெண்கள், என்னை துாக்கி தண்ணீர் கொடுத்தனர். இரண்டு நிமிடம் வரை, அம்மன் கண் திறந்திருந்ததை, அனைவரும் பார்த்தனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !