கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி!
ADDED :4110 days ago
புதுச்சேரி: கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழாவில், நேற்று வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி சுப்பையா சாலை, மோரேசன் வீதியிலுள்ள, கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாவது நாள் நிகழ்ச்சியான நேற்று காலை, சிங்கமுகா சூரன் புறப்பாடு நடந்தது. இரவு 8.00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 9.00 மணிக்கு, சிங்கமுகா சம்ஹாரமும் நடந்தது. முன்னதாக, மாலை 6.00 மணிக்கு வணிக வரித் துறை அதிகாரி இளங்கோவன் மகள் சரண்யாவின் பக்தி பாடல் இசை நிகழ்ச்சி நடந்தது. சூரசம்ஹார விழா இன்று (29ம் தேதி) இரவு 8.00 மணிக்கு நடக்கிறது.