ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் சிங்கமுகா சூரன் வதம்!
ADDED :4000 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி சிங்கமுகா சூரன் வதம் நடந்தது. ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கந்த புராண வாசிப்பு மற்றும் வீரவாகுத்தேவர்கள் ஊர்வலம், இரவு உற்சவ மூர்த்தி ஆறுமுக சுவாமிகள் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன் செய்தார்.