இன்று சூரசம்ஹாரம் சக்தி அளித்தாள் வேல்!
ADDED :4001 days ago
ஆர்.கே.பேட்டை: சூரனை, முருகப்பெருமான், இன்று மாலை வதம் செய்ய உள்ளார். இதற்காக, பார்வதி அன்னையிடம் பாலமுருகன் வேல் பெற்ற நிகழ்ச்சி நேற்று, நடந்தது. கடந்த 23ம் தேதி முதல், கந்தசஷ்டி விரதம் துவங்கியது. இதையடுத்து, வங்கனுார் மற்றும் பொதட்டூர்பேட்டை சுப்ரமணியசுவாமி, ஆறுமுகசாமி மலைக்கோவில்களில் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. மாலையில் உற்சவர் வீதியுலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று மாலை, சூரனை, முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக, அன்னை பார்வதியிடம், பாலமுருகன் வேல் பெற்ற நிகழ்ச்சி, வங்கனுாரில் நேற்று நடந்தது.பொதட்டூர் பேட்டையில் நாளை, தேர் திரு விழாவும், நாளை மறுதினம் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளன.