உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா!

சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா!

கூடலூர் : கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 17ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 24ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கூடல் சுந்தரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு நடந்தது. சமயசொற்பொழிவு நிகழ்ச்சியில் "ஆன்மிக அமுதம் என்ற தலைப்பில் பேராசிரியர் காளியப்பன், "தியாகசீலர் பீஷ்மர் என்ற தலைப்பில் கவிஞர் சேதுமாதவவன், "அறிவியலும் ஆன்மிகமும் தலைப்பில் கவிஞர் பாரதன், "கிழவியும் குமரனும் என்ற தலைப்பில் பேராசிரியர் முருகேசபாண்டியன் ஆகியோர் பேசினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !