ரிஷிவந்தியம் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா
ADDED :4154 days ago
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது. ரிஷிவந்தியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமிக்கு கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. தினமும் சுவாமி திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து 27ம் தேதி பச்சை போடும் நிகழ்ச்சியும், நேற்று இரவு கம்பம் ஏறும் உற்சவமும் நடந்தது. இன்று சூரனை முருகப்பெருமாள் வதம் செய்து ஆட்கொள்ளும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை செங்குந்த முதலியார் சமூகத்தினர் செய்துள்ளனர்.