உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா!

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா!

வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழா இன்று(29ம்தேதி) நடக்கிறது. வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இரண்டாம் ஆண்டு கந்தசஷ்டி விழா 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும், காலை 6.00 மணிக்கு உற்சவர் சிறப்பு அபிேஷகமும், சிறப்பு அலங்கார வழிபாடும், சிறப்பு புஷ்பாபிேஷகமும் நடக்கிறது.விழாவில், நேற்று காலை 8.00 மணிக்கு கணபதி வேள்வியுடன், லட்ச்சார்ச்சணை பெருவிழா, உலகநல வேள்வி, மஹாயாகம் நடைபெற்றன. இன்று (29ம்தேதி) பகல் 12.00 மணிக்கு, வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் உற்சவம் நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, அம்மனிடம் பெற்ற சக்தி வேலால் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்டேன்மோர் சந்திப்பில் முதல் சூரனான தாரகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், பின் காந்திசிலை வளாகத்தில், இரண்டாவது சூரனான சிங்கமுகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், பழைய பஸ் ஸ்டாண்டு ரோட்டில் மூன்றாவது சூரனான பானுகோபன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், நான்காவது சூரனான சூரபத்மனை, தபால் நிலையத்தின் முன்பு வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கந்தசஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !