ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் உற்சவம் நிறைவு!
ADDED :3996 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், பூதத்தாழ்வார் உற்சவம், நேற்று நிறைவடைந்தது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், கடந்த மாதம் 23ம் தேதி துவங்கி, தினமும், சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், நாலாயிர திவ்விய பிரபந்த சேவை, திருப்பாவை சாற்றுமறை, வீதியுலா, திருவாய்மொழி சேவை என, தொடர்ந்து நடந்தது. அதைத் தொடர்ந்து, முக்கிய உற்சவமாக, கடந்த 31ம் தேதி, பூதத்தாழ்வார் திருத்தேர் மற்றும் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ஆதிவராக பெருமாள் மங்களாசாசனம் நடைபெற்று, நேற்று, விடையாற்றி உற்சவத்துடன், அவதார உற்சவம் நிறைவடைந்தது.