அபிநவ மந்த்ராலயத்தில் நாளை திருக்கல்யாணம்
ADDED :3996 days ago
விழுப்புரம்: வண்டிமேடு கே.வி.ஆர்., நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில் நாளை மாலை 6:00 மணிக்கு உத்தான துவாதசியையொட்டி ஸ்ரீ துளசி தாமோதர திருக்கல்யாணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து வரும் 8ம் தேதி காலை 9:00 மணிக்கு ராகவேந்திராச்சாரியார் தலைமையில் வனபோஜன வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.