உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வியாசேஸ்வரருக்கு பாலாபிஷேகம்

வியாசேஸ்வரருக்கு பாலாபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, வரும் 6ம் தேதி, வங்கனுார் வியாசேஸ்வர பெருமானுக்கு பாலாபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடக்கின்றன. வங்கனுார் மலை மீது, விசாலாட்சி உடனுறை வியாசேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2012ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஐப்பசி பவுர்ணமியில், மூலவருக்கு பாலாபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடத்தப்படுகிறது. வரும் 6ம் தேதி பவுர்ணமியை ஒட்டி, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காலை 8:00 மணிக்கு, 108 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மலை மீது உள்ள வியாசேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும். மாலை 4:00 மணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !