உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயங்கொண்ட மாரியம்மன் கோவில் திருப்பணி குழு உறுப்பினர்கள் நியமனம்!

ஜெயங்கொண்ட மாரியம்மன் கோவில் திருப்பணி குழு உறுப்பினர்கள் நியமனம்!

புதுச்சேரி; நெல்லித்தோப்பு கோவில் திருப்பணி குழு உறுப்பினர்களுக்கு அரசாணை வழங்கப்பட்டது. நெல்லித்தோப்பு, லெனின் வீதியில் உள்ள செல்வவிநாயகர் ஜெயங்கொண்ட மாரியம்மன் கோவிலுக்கு திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட, திருப்பணி குழு உறுப்பினர்கள் ௨௧ பேருக்கு, அதற்கான அரசாணையை ஓம்சக்திசேகர் எம்.எல்.ஏ., வழங்கினார். சக்தி நகரில் உள்ள சந்துமுத்து மாரியம்மன் கோவிலில் ஒரு கால பூஜை செய்ய 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் சதாசிவம், திருப்பணி கமிட்டி தலைவர் தாகூர்வர்மா, துணைத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !